கேரளத்தைத் தொடர்ந்து மேற்கு வங்கத்திலும் தமிழக வெற்றிக் கழகத்தின் கிளை தொடங்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தவெகவை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகத்தை விஜய் தொடங்கினார். கட்சித் தொடங்கி 2 ஆண்டுகளில் சந்தித்த முதல் தேர்தலிலேயே வெற்றி பெற்ற தமிழக முதல்வராக பொறுப்பேற்றார். தமிழகத்தைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு கேரளத்தில் தவெக தொடங்கப்பட்டது. இதற்காக இளைஞர்கள் பலர் இணைந்து கூட்டங்களையும் நடத்தி, தொண்டர்களை சேர்க்கும் பணிகளும் நடைபெற்றன. இந்நிலையில், மேற்கு வங்கத்தில் தவெக கிளை தொடங்கப்பட்டுள்ளது. கிழக்கு பர்த்வான் மாவட்டத்தில் உள்ள பகுபூர் பகுதியில் கட்சியின் கிளை தொடங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதன் மாநில நிர்வாகிகளாக மேற்கு வங்க மாநில ஒருங்கிணைப்பாளர் சைத்தாலி ராய், இணை ஒருங்கிணைப்பாளர் சஞ்சய். டி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். தவெக கிளை தொடங்கப்பட்ட மேடையில் கட்சியின் தலைவர் விஜய்யின் படமும், பொதுச்செயலாளர் என். ஆனந்தின் படமும் வைக்கப்பட்டிருந்தது. தொண்டர்கள் பலரும் தவெகவின் சிவப்பு, மஞ்சள் நிறத்திலான துண்டு அணிந்துகொண்டு நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.TVK unit launched in West Bengal