நாடு முழுவதும் குழப்பத்தை விளைவிக்கும் காங்கிரஸ்: ஜெ.பி. நட்டா குற்றச்சாட்டு!

Wait 5 sec.

வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தப் பணி விவகாரத்தில் நாடு முழுவதும் குழப்பத்தை விளைவிக்க காங்கிரஸ் முயல்வதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான ஜெ.பி. நட்டா தெரிவித்துள்ளார்.வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தப் பணிக்கு எதிராக நாடு முழுவதும் காங்கிரஸ் சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.இதுதொடர்பாகப் பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான ஜெ.பி. நட்டா, “நாட்டின் வளர்ச்சியைக் கண்டு எதிர்க்கட்சிகள் விரக்தியில் உள்ளனர். அதனாலேயே, நாட்டில் குழப்பத்தையும் அராஜகத்தையும் உருவாக்க தொடர்ந்து புதிய பிரச்னைகளைக் கிளப்பி வருகின்றனர்.சில நாட்களுக்கு முன்பு ஒரு புனையப்பட்ட கதையைக் கொண்டு நாடு முழுவதும் உருவாக்கப்பட்ட கூச்சலை நாம் பார்த்தோம். தேர்தல் ஆணைய உறுப்பினர்கள் அவர்களின் பொய்களை அம்பலப்படுத்திய நிலையில், தற்போது மீண்டும் நாட்டின் சூழலைக் கெடுக்க முயற்சிக்கின்றனர்.காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மமதா பானர்ஜி ஆகியோர் நாட்டின் அரசியலமைப்பு நிறுவனங்களின் நம்பகத்தன்மையைக் குறைப்பதையும், அவற்றை வலுவிழக்கச் செய்வதையும் நோக்கமாகக் கொண்டு அரசியல் சதித் திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றனர்.ராகுல் காந்தி அவர்களே. கவனமாகக் கேளுங்கள். ஒரு பொய்யை நூறு முறை திரும்பத் திரும்பச் சொன்னால் அது உண்மையாகாது.பொதுச் சேவையை விட அதிகாரத்தைக் கைப்பற்றுவதே எதிர்க்கட்சிகளின் கவனம் உள்ளது. எதிர்க்கட்சித் தலைவர்கள் வாரிசு அரசியலை ஊக்குவித்து தனிப்பட்ட ஆதாயங்களைத் தேடுகின்றனர். நாட்டின் பாதுகாப்பு மற்றும் கண்ணியம் தொடர்பாக எதிர்க்கட்சிகளுக்கு அக்கறை இல்லை” என்று அவர் பேசியுள்ளார்.யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணம்: தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!Congress causing chaos across the country: J.P. Nadda's allegation