ஜெயிலர் - 2 திரைப்படத்தின் டிரைலர் மற்றும் அடுத்தடுத்த அப்டேட்ஸ் பற்றிய அறிவிப்பு வெளியானது.இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ஜெயிலர் - 2 திரைப்படம் அக். 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகின்றது. இதற்கான, புரமோஷன்கள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.முன்னதாக, நடிகர்கள் வித்யா பாலன், எஸ்ஜே சூர்யா, சூரஜ் வெஞ்சரமூடு ஆகியோரின் கதாபாத்திர அறிமுக விடியோக்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்றன. அதேபோல், முதல் பாடல அல்ல போலலோ பாடல் ரசிக்க வைத்தது. தொடர்ந்து, ஒன் மூன் பாடலும் வெளியாகி வைரலாகியுள்ளது.இந்த நிலையில், இப்படத்தின் அனைத்து பாடல்களையும் செப். 30 ஆம் தேதி இசையமைப்பாளர் அனிருத் இசைக்கச்சேரி போல் நடத்தி வெளியிட உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இதனைத் தொடர்ந்து, ஜெயிலர் - 2 படத்தின் அடுத்தடுத்த அப்டேட்ஸ் எப்போது வெளியாகும் என விடியோ வெளியாகியுள்ளது. அதில், 29/09/2026 - ஒன் நேம் பாடல் லிரிக்கல் விடியோ வெளியீடு30/09/2026 - நான்காவது பாடல் விடியோ வெளியீடு30/09/2026 - ஜெயிலர் - 2 முழு இசை ஆல்பம் வெளியீடு03/10/2026 - இசை வெளியீட்டு நிகழ்ச்சி சன் நெக்ஸ்ட் தளத்தில் வெளியீடு04/10/2026 - இசை வெளியீட்டு நிகழ்ச்சி ஒளிபரப்பு05/10/2026 - ஜெயிலர் - 2 டிரைலர் வெளியீடுஎன அடுத்தத்த நாள்களில் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.டிசி திரைப்படத்திற்கு செய்ததைப் போன்று, குறைவான ரசிகர்களை வைத்து மேடையில் அனைத்து பாடல்களையும் பாடி வெளியிடவுள்ளனதாகக் கூறப்படுகிறது. மேலும், ஜெயிலர் - 2 படத்திற்கு தனியே இசை வெளியீட்டு விழா நடைபெறாது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.Ready ah? #Jailer2@rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial @vidya_balan @iam_SJSuryah #SurajVenjaramoodu @meramyakrishnan @iYogiBabu @mirnaaofficial @vijaykartikdop @Nirmalcuts @ChethanDsouza @AlwaysJani @KiranDrk @sunilreddy22 #PallaviSingh @valentino_suren… pic.twitter.com/ZVlb8dH8Ih— Sun Pictures (@sunpictures) September 28, 2026 ஜெயிலர் - 2 இசை வெளியீடு அறிவிப்பு!Jailer 2 trailer and subsequent updates