சீனாவுக்கு ஆயுதங்களை விற்கும் திட்டம் இல்லை: அமெரிக்கா

Wait 5 sec.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீன அதிபர் ஷி ஜின்பிங்கிடம் அமெரிக்கவிடமிருந்து ஆயுதங்களை வாங்க விருப்பமா என்று கேட்டதாகச் செய்திகள் வெளியான நிலையில், சீனாவுக்கு ஆயுதங்களை விற்கும் திட்டம் ஏதுமில்லை என அமெரிக்கா இன்று தெரிவித்தது.தைவானுக்கு அமெரிக்கா ஆயுதங்கள் விற்பனை செய்வது தொடர்பாக சீனா ஆட்சேபனை தெரிவித்து வரும் நிலையில், அதற்கு பதிலளிக்கும் விதமாக சீனாவுக்கு ஆயுதங்கள் விற்கும் முன்மொழிவை டிரம்ப் முன்வைத்ததாக சீனாவிற்கான அமெரிக்கத் தூதர் டேவிட் பெர்டியூ கூறியிருந்தார்.வெள்ளை மாளிகையில் சீன அதிபர் ஷி கடந்த வாரம் மேற்கொண்ட அரசுமுறைப் பயணத்தின்போது அவருடன் பேசிய டிரம்ப், ”நாங்கள் உலகம் முழுவதும் ஆயுதங்களை விற்பனை செய்கிறோம். நீங்களும் எங்களிடம் ஆயுதங்களை வாங்க விரும்புகிறீர்களா?” எனக் கேட்டதாக தனியார் ஊடகத்திடம் பேசுகையில் டேவிட் பெர்டியூ குறிப்பிட்டார்.மேலும் பேசிய டேவிட் பெர்டியூ, "பிற விற்பனைகள் தொடர்பான பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வருகின்றன. டிரம்ப்பும் அதிபர் ஷியும் சந்திக்கும் போதெல்லாம் அதுபற்றிப் பேசுகிறார்கள்" என்று குறிப்பிட்டார்.ஆனால், “சீனாவுக்கு ஆயுதங்களை விற்கும் திட்டமோ முன்மொழிவோ அமெரிக்க அரசுக்கு இல்லை. அமெரிக்கச் சட்டம் அதனைத் தடை செய்கிறது” என அமெரிக்க வெளியுறவுத்துறை தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த செய்தி அறிக்கையில் இன்று குறிப்பிட்டுள்ளது.இதுபற்றி சீன வெளியுறவுத் துறையிடம் கருத்துகளைக் கேட்டபோது அவர்கள் நேரடியாக பதிலளிக்காமல், “சீனா எப்போதும் தனது சொந்தத் தேவைகளின் அடிப்படையில் பாதுகாப்புத் திறன்களை வலுப்படுத்தி வருகிறது. அதேநேரம், உலக அமைதி மற்றும் நிலைத்தன்மையைப் பேணுவதிலும் சீனா உறுதியாக உள்ளது. அமெரிக்காவைச் சார்ந்திருப்பது அல்லது ராணுவ வழிமுறைகள் மூலமாக சுதந்திரம் தேடுவது ஒரு முட்டுச்சந்தைப் போன்றது” என்று தெரிவித்தனர்.சீனாவுக்கு அமெரிக்க ஆயுதங்களை விற்க டிரம்ப் விருப்பம்: அமெரிக்கத் தூதர் தகவல்No plan to sell arms to China: US