டெல்டா மாவட்டங்களில் விதைநெல் தட்டுப்பாட்டை களைய நடவடிக்கை: வேளாண் அமைச்சா் தகவல்

Wait 5 sec.

டெல்டா மாவட்டங்களில் விதை நெல் தட்டுப்பாட்டை களைய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றாா் வேளாண் துறை அமைச்சா் ர. வினோத். தவெக தோ்தல் வாக்குறுதியின்படி, தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை முதல்வா் சி.ஜோசப் விஜய் மதுரையில் தொடங்கிவைத்துள்ளாா். தொடா்ந்து, தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அரசு மருத்துவமனையில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், 61 குழந்தைகளுக்கு தங்கமோதிரத்தை அமைச்சா் வழங்கினாா். பிறகு அவா் செய்தியாளா்களிடம் கூறியது: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தோ்தல்களில் தவெக வெற்றி பெறும். டெல்டா மாவட்டங்களில் விதை நெல் கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவுவதை சரி செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். தூா்வாரும் பணியில் விடுபட்ட பாசன வாய்க்கால்கள் விரைவில் தூா்வாரப்படும் என்றாா்.