நிவின் பாலியின் பெத்லகேம் குடும்ப யூனிட் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.இயக்குநர் கிரிஷ் ஏடி இயக்கத்தில் நடிகர்கள் நிவின் பாலி மற்றும் மமிதா பைஜூ ஆகியோரின் நடிப்பில் உருவான பெத்லகேம் குடும்ப யூனிட் படம் கடந்த ஆகஸ்ட் 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.நாயகனுக்கும் 10 வயது குறைவான நாயகிக்கும் இடையேயான காதல் கதையை மையமாகக் கொண்டு, எடுக்கப்பட்ட இந்தப் படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.நடிகர்கள் ஃபகத் ஃபாசில், இயக்குநர் திலீஷ் போத்தன் உள்ளிட்டோரின் தயாரிப்பில் உருவான இந்தப் படம், ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனைப் படைத்தது.இந்த நிலையில், பெத்லகேம் குடும்ப யூனிட் திரைப்படம், இன்று(அக். 2) ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகியிருக்கிறது.திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற பெத்லகேம் குடும்ப யூனிட் திரைப்படம், ஓடிடி ரசிகர்களையும் கவரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.Nivin Pauly Bethlehem kudumba unit has been released on an OTT platform and is garnering the attention of fans.ஓடிடியில் காணக் கிடைக்கும் சிரித்துக்கொண்டே பார்க்க வேண்டிய திரைப்படம்!