அக்டோபர் 2 தொடர் விடுமுறை: கோவை பேருந்து நிலையத்தில் அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் அதிரடி ஆய்வு

Wait 5 sec.

கோவை: காந்தி ஜெயந்தி தொடர் விடுமுறையை முன்னிட்டு கோவையில் பேருந்து சேவை தொடர்பாக, போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.காந்தி ஜெயந்தி தொடர் விடுமுறையை முன்னிட்டு மக்கள் சிரமமின்றி மற்றும் பாதுகாப்பாகத் தங்களின் சொந்த ஊர்களுக்குப் பயணம் செய்ய ஏதுவாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் பல்வேறு சிறப்பு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.இந்த நிலையில், கோவை காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கும் கிராமப் பகுதிகளுக்கும் அரசுப் பேருந்துகளை இயக்குவதில் ஏதேனும் இடையூறு உள்ளதா, பயணிகளுக்குச் செய்யப்பட்டிருக்கும் அடிப்படை வசதிகள் மற்றும் சிறப்புப் பேருந்துகளின் இயக்க நிலவரம் குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் வியாழக்கிழமை இரவு நேரில் ஆய்வு மேற்கொண்டார்.போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் நேரில் ஆய்வு ஆய்வின் போது, பேருந்து நிலையத்திற்கு வந்திருந்த பயணிகளிடம் நேரில் சென்று பேசினார். "பேருந்துகள் குறிப்பிட்ட நேரத்திற்கு வருகின்றவா? ஏதேனும் சிரமங்கள் அல்லது குறைகள் உள்ளனவா?" என்று பயணிகளிடம் கேட்டறிந்ததோடு, அவர்களின் கோரிக்கைகளையும் கனிவோடு கேட்டறிந்தார்.மக்கள் வழக்கம்போல் கூட்ட நெரிசலின்றி அரசுப் பேருந்துகளில் பயணம் செய்வதை உறுதி செய்ய அதிகாரிகளுக்குத் தகுந்த அறிவுரைகளை வழங்கிய அமைச்சர், விடுமுறைக் காலத்தில் பயணிகள் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள அரசு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார். October 2nd long weekend: Minister Vijay Tamilan Parthiban conducts a surprise inspection at the Coimbatore bus standரோபோடிக் முறையில் செயற்கை கருத்தரிப்பு: தமிழகத்தில் முதல்முறை