தொடர் விடுமுறை: உதகை செல்லப் பேருந்துகள் இல்லாததால் பயணிகள் அவதி!

Wait 5 sec.

உதகை செல்லப் பேருந்துகள் இல்லாததால், மேட்டுப்பாளையம் புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் அவதியடைந்தனர்.வார இறுதிநாள் மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு கோவையில் இருந்து உதகை, குன்னூர் உள்ளிட்ட நீலகிரி மலைப் பகுதிகளுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் தொழிலாளர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து உள்ளது.​இதற்காக, மேட்டுப்பாளையம் சாலையில் அமைந்து உள்ள புதிய பேருந்து நிலையத்துக்கு, நாள்தோறும் நூற்றுக்கணக்கான பயணிகள் வருகை தருகின்றனர்.இந்த நிலையில், இந்தப் பேருந்து நிலையத்தில் இருந்து உதகை நோக்கிச் செல்லும் அரசுப் போக்குவரத்துத் கழகப் பேருந்துகள்(TNSTC) மற்றும் அரசு விரைவுப் பேருந்துகள் (SETC) போதிய எண்ணிக்கையில் இயக்கப்படுவதில்லை எனப் பயணிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.​நீண்ட நேர இடைவெளியில் அரிதாக வரும் ஓரிரு பேருந்துகளிலும் ஏறுவதற்குப் பயணிகள் இடையே கடும் அடிதடியும் தள்ளுமுள்ளும் ஏற்படுகிறது. இதனால் குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்களுடன், உதகை செல்லக் காத்திருக்கும் பயணிகள், பேருந்து நிலையத்திலேயே தவிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.இது குறித்துப் பாதிக்கப்பட்ட பயணிகள் கூறுகையில்:​"கோவையில் இருந்து உதகைக்குச் செல்லும் பிரதானப் பேருந்து நிலையமாக இது மாற்றப்பட்ட நிலையிலும், இங்கிருந்து உதகைச் செல்லப் போதிய பேருந்துகள் விடப்படுவதில்லை. இதனால், அதிகக் கட்டணம் கொடுத்துத் தனியார் வாகனங்களை நாட வேண்டிய சூழல் உருவாகிறது. எனவே அரசுப் போக்குவரத்துத் கழகம் உடனடியாக தலையிட்டு, மேட்டுப்பாளையம் சாலை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து உதகைக்குக் கூடுதல் சிறப்புப் பேருந்துகளை இயக்க வேண்டும்," எனக் கோரிக்கை விடுத்து உள்ளனர்.Passengers at Mettupalayam New Bus Stand suffered due to non-availability of buses to go to Utagai due to the ongoing holiday.புறநகா் பேருந்துகளிலும் மகளிருக்கு கட்டணம் இல்லை: வெற்றிப் பயணத் திட்டம் இன்று தொடக்கம்!