ராமாயணா ரன்பீர் கபூருக்கான பிடிஎஸ் விடியோ!

Wait 5 sec.

ராமாயணா திரைப்படத்தில் நடிகர் ரன்பீர் கபூருக்கான பிடிஎஸ் விடியோ வெளியாகியுள்ளது. நடிகர்கள் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யாஷ் நடிப்பில் ‘ராமாயணா’ திரைப்படத்தின் முதல் பாகத்திற்கான டிரைலர் சில நாள்களுக்கு முன் வெளியிடப்பட்டது. இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகும் படமாக அறிவிக்கப்பட்ட போது இருந்த எதிர்பார்ப்பு டிரைலருக்கு பின் எகிறியுள்ளது.பான் திரைப்படமான ராமாயணா இந்திய சினிமாவிலேயே அதிகம் பார்க்கப்பட்ட டிரைலர் என்கிற சாதனையைப் புரிந்துள்ளது. இப்படத்தின் முதல் பாடலான ஜெய் ஜெய் ராம் பாடலின் தமிழ் வடிவம் வெளியானது. ஏ. ஆர். ரஹ்மான் இசையமைப்பில் கார்த்திக் நேத்தா எழுதிய இப்பாடலைச் சின்மயி பாடியிருந்தார். இந்த நிலையில், நடிகர் ரன்பீர் கபூரின் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தில் ரன்பீருக்கான மேக்கிங் பிடிஎஸ் விடியோவை வெளியிட்டுள்ளனர். இதில், பண்பாட்டில் ராமாயணத்தின் பங்கு குறித்து ரன்பீர் பேசுவதும் காட்சிகளை எடுத்த விதமும் கவனம் ஈர்த்துள்ளது. A behind-the-scenes video featuring actor Ranbir Kapoor from the movie Ramayana has been released.