ஆசிய விளையாட்டு: காலிறுதிக்கு முன்னேறிய தமிழர்கள் பதக்கம் வெல்வார்களா?

Wait 5 sec.

ஆசிய விளையாட்டுப் போட்டி டென்னிஸ் ஆடவர் இரட்டையர் பிரிவில் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் தமிழர்கள் இணையினர் 2-0 என்ற செட்டில் வென்று, காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்கள். ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026 ஜப்பானின் அய்ச்சி - நகோயா பகுதியில் செப். 19 ஆம் தேதி தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகின்றன.ஆடவர் இரட்டையர் டென்னிஸ் காலிறுதிக்கு முந்தையர் சுற்றில் இந்தியாவின் அனிருத் சந்திரசேகர், பாலாஜி நாராயணசுவாமி இணையினர் நேபாள் இணையினர் அபிஷேக் பஸ்தாவுலா & பிரதீப் கட்கா உடன் மோதினார்கள். இந்தப் போட்டியில், அனிருத் சந்திரசேகர், பாலாஜி நாராயணசுவாமி ஆகியோர் 2-0 என (6–2, 6–1) நேர் செட்களில் வென்று காலிறுதிக்குத் தேர்வாகியுள்ளார்கள். காலிறுதிப் போட்டி செப்.30ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்தப் போட்டியில் வென்றால், பதக்க உறுதியாகிவிடும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதுவரை இந்தியாவுக்கு 48 பதக்கங்கள் கிடைத்துள்ளன. அதில் 5 தங்கம், 21 வெள்ளி, 22 வெண்கலப் பதக்கங்கள் கிடைத்துள்ளன. இதில் தமிழக வீரர், வீராங்கனைகளின் பங்கு 20 சதவிகிதத்திற்கும் அதிகமாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது. INTO THE QUARTERFINALS! Asian Games 2026 | Tennis Men’s Doubles – Round of 16The Indian duo of Anirudh Chandrasekar (TAGG Athlete) and Balaji Narayanaswamy (TAGG Athlete) secured a commanding 2–0 victory over Nepal’s Abhishek Bastola & Pradip Khadka.Set Scores: 6–2,… pic.twitter.com/3P6bRHHJI5— SAI Media (@Media_SAI) September 29, 2026உலக சாம்பியனை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்திய குத்துச்சண்டை வீரர்! Tamilnadu Men’s tennis Doubles Anirudh Chandrasekar, Balaji Narayanaswamy into the quaterfinals at asian games 2026