இருமொழிக் கொள்கை என்பது தமிழ்நாட்டின் உயிர்க்கொள்கை, அதில் விளையாட வேண்டாம் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.சாத்தான்குளத்தில் மாநில நெடுஞ்சாலை துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள வழிகாட்டி பலகையில், ஊரின் பெயர்கள் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி ஆகிய 3 மொழிகளில் இருந்தது சர்ச்சையானது.இது தொடர்பாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:”இதுவரை மத்திய அரசின் ஹிந்தித் திணிப்பைத்தான் தமிழ்நாடு எதிர்கொண்டு வந்தது.தற்போது, மாநில அரசே அந்தப் பணியைச் செய்வதுதான் அவர்கள் சொன்ன மாற்றம் போல.எல்லாவற்றிலும், ஆழம் பார்த்துவிட்டு, எதிர்ப்பு கிளம்பியதும் 'யூ டர்ன்' அடிக்கும் த.வெ.க. அரசின் மற்றுமொரு முயற்சியா இது?வடமாநில இன்ஃப்ளூயன்சர்களுக்காக ரீல்ஸ் ஆட்சி நடத்தும் த.வெ.க. அரசு, இதன் ஆபத்தை உணர்ந்து, உடனடியாகத் தனது அணுகுமுறையை மாற்றிக்கொள்ள வேண்டும் என எச்சரிக்கிறேன்.இருமொழிக் கொள்கை என்பது தமிழ்நாட்டின் உயிர்க்கொள்கை. அதில் விளையாட வேண்டாம்!” என்று குறிப்பிட்டுள்ளார்.DMK leader M.K. Stalin has stated that the two-language policy is a vital policy for Tamil Nadu and warned against trifling with it.நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி ஸ்டாலின்