சென்னையில் சிக்மா படத்தை காணும் சங்கீதா, திவ்யா விஜய்!

Wait 5 sec.

இயக்குநர் ஜேசன் சஞ்சய்யின் சிக்மா படத்தை காண அவரது தாயார் சங்கீதா மற்றும் சகோதரி திவ்யா விஜய் ஆகியோர் திரையரங்கிற்கு வந்துள்ளனர்.லைகா தயாரிப்பில் இயக்குநராக அறிமுகமாகும் முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய்யின் சிக்மா படத்தில் சந்தீப் கிஷன் நாயகனாகவும் ஃபரியா அப்துல்லா நாயகியாக நடித்துள்ளார்.இந்தப் படம் தமிழ்நாடு முழுவதும் இன்று காலை 9.30 மணியளவில் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.தமிழ்நாடு முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் முதல் திரைப்படம் என்பதால், மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.இந்த நிலையில், சென்னை வடபழனியில் உள்ள கமலா திரையரங்கில் ஒளிபரப்பாகி வரும் சிக்மா திரைப்படத்தின் முதல் காட்சியை ஜேசன் சஞ்சய்யின் தாய் சங்கீதாவும், சகோதரி திவ்யா விஜய்யும் பார்த்து வருகின்றனர்.முதல்வர் விஜய் இன்று காலை மகளிர் இலவச பேருந்து பயணத் திட்டத்தை தொடக்கி வைத்துவிட்டு, மதுராந்தகம் தேர்தல் பிரசாரத்துக்கு புறப்படவுள்ளதால், அவர் சிக்மா படத்தை எப்போது பார்ப்பார் என்ற தகவல் வெளியாகவில்லை.Sangeetha and Divya Vijay watching the movie 'Sigma' in Chennai!முதல்வர் விஜய் சிக்மா திரைப்படத்தைப் பார்க்க வேண்டும்: சந்தீப் கிஷன்