அகிம்சை என்னும் பேராயுதத்தால் உலகையே வியக்க வைத்தவர் காந்தியடிகள்: முதல்வர் விஜய்

Wait 5 sec.

அகிம்சை என்னும் பேராயுதத்தால் உலகையே வியக்க வைத்தவர் மகாத்மா காந்தி என்று அவரது பிறந்த நாளில், முதல்வர் விஜய் தன்னுடைய சமூக வலைதளப் பதிவில் தெரிவித்துள்ளார்.தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின் பிறந்த நாளை முன்னிட்டு, முதல்வர் சி. ஜோசப் விஜய் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:”அகிம்சை என்னும் பேராயுதத்தால் உலகையே வியக்க வைத்து, இந்தியத் திருநாட்டிற்கு விடுதலையைப் பெற்றுத்தந்த மாபெரும் தலைவர், நமது தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின் பிறந்த நாளில் அவரது தேசப்பற்றையும். தியாக வாழ்வையும் போற்றி வணங்குகிறேன்.எளிமை, நேர்மை, மனிதநேயம், சமத்துவம், சமூக நல்லிணக்கம் ஆகியவற்றைத் தனது வாழ்வின் நெறிகளாகக் கொண்டு, உலகம் முழுமைக்கும் அன்பையும், சகோதரத்துவத்தையும் பரப்பிய மாமனிதராகத் திகழ்ந்தவர்.மகாத்மா காந்தியடிகளின் கனவுகளை நனவாக்கி, அமைதியும், நல்லிணக்கமும், சகோதரத்துவமும் தழைத்திடும் சமூகத்தை உருவாக்கி, நாட்டின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் பாதுகாத்து, அவர் காட்டிய அறவழியில் நமது வெற்றிப் பயணத்தைத் தொடர்வோம்!” என்று குறிப்பிட்டுள்ளார்.On the occasion of his birth anniversary, Chief Minister Vijay stated in a social media post that Mahatma Gandhi amazed the entire world with the mighty weapon of non-violence.