சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ. 240 குறைந்து, ரூ. 1,09,440 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு, உலக பங்குச் சந்தை செயல்பாடு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில், தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் விற்பனையாகி வருகிறது.சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ. 200 குறைந்த நிலையில் புதன்கிழமை சவரனுக்கு ரூ. 560 உயர்ந்தது. இன்றைய தங்கம் விலைதொடர்ந்து இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. இன்று (அக். 1, வியாழக்கிழமை) கிராமுக்கு ரூ. 30 குறைந்து ரூ.13,680-க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ. 240 குறைந்து ரூ. 1,09,440 -க்கு விற்பனையாகிறது.இன்றைய வெள்ளி விலைஅதேபோன்று வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது.வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 5 குறைந்து ரூ. 240-க்கும், கிலோவுக்கு ரூ. 5,000 குறைந்து (கட்டி வெள்ளி) ரூ. 2.40 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.