திருச்சி மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநா் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா். திருச்சி மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநராக கே. ராதாகிருஷ்ணன் இருந்து வந்தாா். இந்நிலையில், தமிழகத்தில் பல்வேறு கல்லூரிக் கல்வி இணை இயக்குநா்கள், முதல்வா்கள் திங்கள்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். இதில், திருச்சி மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநராகப் பணியாற்றி வந்த கே. ராதாகிருஷ்ணன் மதுரை மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா். இதைத் தொடா்ந்து திருச்சி மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநராக, துவாக்குடி அரசு கலை அறிவியல் கல்லூரி முதல்வராக பணியாற்றி வந்த பி. சத்யா நியமிக்கப்பட்டுள்ளாா்.