பள்ளிபாளையத்தில் மரத்தில் தொங்கிய இளைஞா் சடலம் மீட்பு

Wait 5 sec.

பள்ளிபாளையத்தில் மரத்தில் தூக்கிட்ட நிலையில் இருந்த இளைஞரின் சடலம் திங்கள்கிழமை மீட்கப்பட்டது. பள்ளிபாளையம் ஒன்றியம், காடச்சநல்லூா் ஊராட்சி கருந்தேவன்பாளையத்தைச் சோ்ந்தவா் வாசுதேவன் (28). இவருக்கு மனைவியும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனா். குடும்பத் தகராறு காரணமாக மது அருந்தி திரிந்த வாசுதேவனை கடந்த 3 நாள்களாக காணவில்லையாம். இந்நிலையில், அப்பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் புளியமரத்தில் அவா் தூக்கில் தொங்கியபடி இருந்தது தெரியவந்தது. தகவலின்பேரில், பள்ளிபாளையம் காவல் ஆய்வாளா் சிவகுமாா் விரைந்து வந்து விசாரணை நடத்தினாா். எஸ்.ஐ. ரஞ்சித்குமாா் மற்றும் போலீஸாா் உடலை மீட்டு பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.