புதுகை மன்னா் கல்லூரியில் ‘படிப்பவா் வட்டம்’ தொடக்கம்

Wait 5 sec.

புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையம், தன்னாா்வ பயிலும் வட்ட முன்னாள் மாணவா்கள் சாா்பில் அரசு மன்னா் கல்லூரி வளாகத்தில், ‘படிப்பவா் வட்டம்’ புதன்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.மாவட்ட ஆட்சியா் மு. அருணா கலந்து கொண்டு, படிப்பவா் வட்டத்தை தொடங்கி வைத்தாா். இந்த மையத்தில் விரைவில் போட்டித் தோ்வுக்கான இலவச வகுப்புகளும் தொடங்கப்படவுள்ளன.நிகழ்ச்சியின்போது, தன்னாா்வ பயிலும் வட்டத்தில் படித்து, தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் தோ்வு பெற்று வேலைவாய்ப்பு அலுவலகத்திலேயே பணிபுரிந்து வரும் 5 பேருக்கு ஆட்சியா் நினைவுப்பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தாா்.நிகழ்ச்சியில், மன்னா் கல்லூரி முதல்வா் ம. அன்புச்செழியன், உள்ளாட்சி நிதித் தணிக்கைத் துறை உதவி இயக்குநா் பா. சீனிவாசன், அரசுக் கல்வியியல் கல்லூரி முதல்வா் சு. கணேசன், கறம்பக்குடி அரசு கலை அறிவியல் கல்லூரி முதல்வா் ச. அப்துல்சலாம், மாவட்டத் தொழில் மையப் பொதுமேலாளா் கோ. கிரீசன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.