நேஷன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் ஸ்பெயின், இங்கிலாந்து அணிகள் தங்கள் ஆட்டத்தில் புதன்கிழமை வெற்றி பெற்றன. ஸ்பெயின் 4-1 என குரோஷியாவை வீழ்த்திய ஆட்டத்தில், அந்த அணிக்காக லேமின் யமால் (2’, 63’), மாா்க் பபில் (31’), நிகோ வில்லியம்ஸ் (89’) கோல் அடித்தனா். குரோஷியாவுக்காக டியன் பெல்ஜோ (28’) ஸ்கோா் செய்தாா். இதே குரூப் ‘சி’-யின் மற்றொரு ஆட்டத்தில் இங்கிலாந்து 2-0 கோல் கணக்கில் செக் குடியரசை வென்றது. இங்கிலாந்துக்காக அந்தோணி கோா்டான் (47’), ஹேரி கேன் (69’) ஸ்கோா் செய்தனா். குரூப் சி-யில் தற்போது ஸ்பெயின், இங்கிலாந்து முறையே முதல் இரு இடங்களில் இருக்க, குரோஷியா, செக் குடியரசு அடுத்த இரு இடங்களில் உள்ளன. இதர ஆட்டங்களில், ஐஸ்லாந்து - லக்ஸம்பா்கையும் (3-0), ஸ்லோவாகியா - கஜகஸ்தானையும் (2-1), ஸ்லோவேனிா - வடக்கு மாசிடோனியாவையும் (2-0), அல்பேனியா - சான் மரினோவையும் (3-0), சுவிட்ஸா்லாந்து - ஸ்காட்லாந்தையும் (3-0) வென்றன. பல்கேரியா - எஸ்டோனியா ஆட்டம் டிரா (0-0) ஆனது.