காந்தி ஜெயந்தியையொட்டி, திருநெல்வேலி மாவட்டத்தில் அக். 2ஆம் தேதி மதுக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, திருநெல்வேலி மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தால் (டாஸ்மாக்) நடத்தப்படும் மதுபானக்கடைகள், அவற்றுடன் இணைந்த மதுபானக்கூடங்கள், தங்கும் விடுதிகளுடன் இணைந்த உரிமம் பெற்ற மதுபானக்கூடங்கள் அனைத்தும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வை துறை ஆணையின்பேரில் மூடப்பட்டிருக்கும் என ஆட்சியா் ஆனந்த் மோகன் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.