இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று குவாஹாட் கிரிக்கெட் திடலில் தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. இநிதீஷ் குமாருக்குப் பதிலாக ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த ஆகிப் நபி ந்திய அணியில் அறிமுகமாகியுள்ளார். கடந்த போட்டியில் நமன் திர் அறிமுகமாகியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. முதல் போட்டியில் வென்ற இந்திய அணி 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது. மேற்கிந்தியத் தீவுகள் ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 33 ரன்கள் எடுத்துள்ளது. கடந்த போட்டியைப் போலவே அதிரடியான தொடக்கத்தையே அளித்து வருகிறது. மேற்கிந்தியத் தீவுகள் (பிளேயிங் லெவன்): : ஜான் கேம்ப்பெல், கீசி கார்டி, ஷாய் ஹோப், அமீர் ஜாங்கூ, ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், ரோஸ்டன் சேஸ், கீமோ பால், அல்ஸாரி ஜோசப், ஷமர் ஜோசப், ஜெய்டன் சீல்ஸ், விட்டல் லாவ்ஸ்இந்தியா (பிளேயிங் லெவன்): ரோஹித் சர்மா, ஷுப்மன் கில், விராட் கோலி, ருதுராஜ் கெய்க்வாட், கே.எல். ராகுல், நமன் திர், ரவீந்திர ஜடேஜா, ஆகிப் நபி, குர்னூர் பிரார், குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணாIndia opt to bowl against West Indies in second ODI in Guwahati Auqib Nabi makes his debut in place of Nitish.