இஷான் கிஷன் 80*: இலங்கைக்கு 170 ரன்களை இலக்காக நிர்ணயித்த இந்தியா!

Wait 5 sec.

ஆசிய விளையாட்டில் ஆடவருக்கான இலங்கைக்கு எதிரான அரையிறுதி கிரிக்கெட் போட்டியில் இந்தியா 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்துள்ளது. டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக அபிஷேக் சர்மா, சூர்யவன்ஷி களமிறங்கினார்கள். அபிஷேக் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க மூன்றாம் இடத்தில் சஞ்சு சாம்சன் களமிறங்கி, அவரும் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார்.அதிரடியாக விளையாடிய வைபவ் சூர்யவன்ஷி 38 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். கேப்டன் ஷ்ரேயாஸ் 13 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக, இஷான் கிஷன் மிகவும் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். கடைசிவரை ஆட்டமிழக்கமால் இருந்து 80 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இறுதியில் வந்த வாஷிங்டன் சுந்தர் 3 பந்துகளில் 7 ரன்கள் எடுத்து உதவினார். இலங்கை சார்பில் தரிந்து ரத்நாயக்க, சஹான் அரச்சிகே தலா 2 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்கள். இந்தப் போட்டியில் வெல்லும் அணி பாகிஸ்தானுடன் தங்கப் பதக்கத்துக்கான இறுதிப் போட்டியில் விளையாடும். தோல்வியுறும் அணி வெண்கலப் பதக்கத்துக்காக வங்கதேசத்துடன் மோதும் என்பதும் குறிப்பிடத்தக்கது.வங்கதேசத்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது ஆடவர் பாகிஸ்தான்!Ishan Kishan 80* runs: India sets a target of 170 runs for Sri Lanka!