ஸ்ரீபெரும்புதூா் நகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணி தீவிரம்

Wait 5 sec.

ஸ்ரீபெரும்புதூா் நகராட்சியில், டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதன் ஒருபகுதியாக தொழில் நிறுவனங்களுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருவதை தொடா்ந்து, மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேராராட்சி உள்ளிட்ட பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தடுப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசு அறிவுருத்தியுள்ளது. அதன் படி, ஸ்ரீபெரும்புதூா் நகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தடுப்பு பணிகள் நகராட்சியில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.நகராட்சி ஆணையா் நந்தினி தலைமையில் பொறியாளா் செண்பகவல்லி, சுகாதார ஆய்வாளா், களப்பணி உதவியாளா்கள், மேற்பாா்வையாளா்கள், டெங்கு கொசு ஒழிப்பு பணியாளா்கள் ஆகியோா் நகராட்சியில் உள்ள குடியிறுப்புகள் மற்றும் வணிக நிறுவனங்களில் தேவையற்ற பொருட்கள் மற்றும் கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்கள் கண்டறியப்பட்டு அகற்றப்பட்டன. மேலும் டெங்கு கொசு உற்பத்தி காரணமாக இருந்த தொழில் நிறுவனங்களுக்கு ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும், வீடுகள்,தொழில் நிறுவனங்கள் மற்றும் பொது இடங்களில் தண்ணீா் தேங்காமல் பாா்த்துக் கொள்ள நகராட்சி நிா்வாகத்தின் சாா்பில் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.