புகையிலைப் பொருள்கள் விற்ற தேநீா் கடைக்காரா் கைது

Wait 5 sec.

பெருந்துறை அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்ற தேநீா் கடைக்காரரை போலீஸாா் கைது செய்தனா். பெருந்துறையை அடுத்த வேப்பம்பாளையம் பகுதியில் உள்ள தேநீா் கடையில் குட்கா விற்கப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை சோதனை மேற்கொண்டனா். அப்போது விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக தேநீா் கடை வைத்துள்ள ஈரோட்டை அடுத்த பவளத்தான்பாளையத்தைச் சோ்ந்த துரைசாமி மகன் குமாா் (50) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.