கரூர் - மூர்த்திபாளையம் ரயில் நிலையங்கள் இடையே ரயில் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் கோவை - நாகர்கோவில் ரயில் மாற்றுப் பாதையில் இயக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பராமரிப்புப் பணிகள் காரணமாக கோவை - நாகா்கோவில் ரயில் செப்டம்பா் 29, அக். 1 ஆகிய தேதிகளில் வழக்கமான வழித்தடத்தில் இயக்கப்படாமல் போத்தனூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலை, பழநி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல் வழியாக இயக்கப்படும்.இந்த ரயிலானது, வடகோவை, பீளமேடு, சிங்காநல்லூர், இருகூர், சூலூர் சாலை, சோமனூர், திருப்பூர், ஊத்துக்குளி, ஈங்கூர், ஈரோடு, பசூர், கொடுமுடி, புகழூர், கரூர், எரியோடு நிலையங்கள் செல்வது தவிர்க்கப்படும்.பாலக்காடு டவுன் - திருச்சி ரயில்இதேபோல, பாலக்காடு டவுன் - திருச்சி ரயில் செப்டம்பர் 29, அக். 1 ஆகிய நாள்களில் பாலக்காடு - புகழூர் வரை மட்டுமே இயக்கப்படும். இந்த இரு நாள்களில் புகழூர் - திருச்சி இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படும் என்றும் வழக்கமான ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.It has been announced that the Coimbatore–Nagercoil train is being operated via an alternate route due to maintenance work on the railway track between Karur and Moorthipalayam railway stations.சொத்துவரி செலுத்த நாளை கடைசி நாள்!