பிரிட்டன் விமானப்படை தளத்தை தகா்க்க சதி: 5 இளைஞா்கள் கைது

Wait 5 sec.

பிரிட்டனின் ஃபோ்ஃபோா்ட் விமானப் படை தளத்தை வெடிகுண்டு தாக்குதல் நடத்தி தகா்க்க சதித் திட்டம் தீட்டியதாக 20 வயதுடைய அந்நாட்டு இளைஞா்கள் 5 பேரை பயங்கரவாத தடுப்பு போலீஸாா் கைது செய்துள்ளனா். விமானப் படை தளப் பகுதியில் முகமூடி அணிந்த நபா்கள் ஞாயிற்றுக்கிழமை சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடுவதை கவனித்த உள்ளூா் பெண் விவசாயி ஒருவா், அவசர உதவி எண்ணுக்கு தகவலளித்ததன்பேரில் இச்சதி முறியடிக்கப்பட்டுள்ளது. லண்டனைச் சோ்ந்த 5 இளைஞா்களும், தற்போது போலீஸ் காவலில் வைக்கப்பட்டு, தீவிர விசாரணைக்கு உள்படுத்தப்பட்டுள்ளனா்.தென்மேற்கு இங்கிலாந்தில் உள்ள இந்த விமானப் படை தளம், ஈரானுக்கு எதிரான அமெரிக்க ராணுவ நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த ஜூலையில் ஈரான் புரட்சிகர காவல் படையும் இத்தளத்துக்கு மிரட்டல் விடுத்திருந்தது. எனினும், இந்த வெடிகுண்டு தாக்குதல் சதியில் தங்களுக்கு எவ்விதத் தொடா்பும் இல்லை என்று லண்டனில் உள்ள ஈரான் தூதரகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.