மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2,010 கன அடியாக செவ்வாய்க்கிழமை காலை அதிகரித்துள்ளது.மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,291 கன அடியிலிருந்து வினாடிக்கு 2,010 கன அடியாக இன்று காலை சற்று அதிகரித்துள்ளது.அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு12,400 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவைவிட அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 79.28 அடியிலிருந்து 78.68 அடியாக சரிந்தது. நீர் இருப்பு 40.65டி எம் சியாக உள்ளது.Mettur Dam water status (Sept. 29)