சொத்துவரி செலுத்த நாளை கடைசி நாள்!

Wait 5 sec.

சென்னை மாநகராட்சியில் அபராதமின்றி சொத்து வரி செலுத்த நாளை(செப். 30) கடைசி நாள் ஆகும்.சென்னை மாநகராட்சியின் முக்கிய வருவாயாக சொத்து வரி, தொழில் உள்ளிட்டவற்றுக்கான உரிமம் வரிகள் உள்ளன. மாநகராட்சியின் வருவாய் மற்றும் நிதித்துறை மூலம் ஆண்டில் 2 முறை வரி வசூலிக்கப்படுகிறது. அனைத்து மண்டல அலுவலகங்கள் மற்றும் வார்டு உறுப்பினர் அலுவலகங்களில் நேரடியாகவும், மாநகராட்சிக்கான இணையதளத்திலும், வாட்ஸ்ஆப், க்யூ ஆர் குறியீடுகள் மூலமும் வரி வசூல் நடைபெறுகிறது. 2026-27-ஆம் நிதியாண்டின் முதல் அரையாண்டுக்கான சொத்து வரியை நாளைக்குள் செலுத்த வேண்டும். குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சொத்து வரியை செலுத்தாவிடில் மாதத்திற்கு 1% வட்டி அபராதமாக விதிக்கப்படும்.சொத்து உரிமையாளர்கள் www.chennaicorporation.gov.in என்ற இணையதளம், கைபேசி செயலி, 9445061913 என்ற வாட்ஸ்ஆப் எண், மாநகராட்சி கைபேசி செயலி ஆகியவை மூலமும், வரிவசூலிப்பாளர்கள் மூலமும் வரியைச் செலுத்தலாம். உரிய காலத்தில் சொத்து வரியைச் செலுத்துவதன் மூலம் தனி வட்டி விதிப்பைத் தவிர்க்கலாம்.Tomorrow (September 30) is the last day to pay property tax without penalty in Chennai Corporation.சென்னை மாநகராட்சியில் 18 லட்சம் குடியிருப்புகள்