ஆசிய விளையாடுப் போட்டியில் ஆடவருக்கான ஸ்கிஃப் 49இஆர் பாய்மரப் படகுப் போட்டியில் பிரிவில் இந்திய ஆடவர் அணி இரண்டாம் இடம் பிடித்து வெள்ளி வென்றது. ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026 ஜப்பானின் அய்ச்சி - நகோயா பகுதியில் செப். 19 ஆம் தேதி தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகின்றன.ஸ்கிஃப் படகோட்டுதலில் 49இஆர் பிரிவில் பங்கேற்ற இந்தியர்கள் மனு பிரான்சிஸ் மற்றும் பிரின்ஸ் நோபிள் 3 ரேஸில் வென்று 23 சராசரி புள்ளிகளைப் பெற்று இரண்டாமிடத்துடன் வெள்ளி வென்றார்கள். சீன வீரர்கள் 16 சராசரி புள்ளிகளுடன் நான்கு ரேஸில் வென்று முதலிடம் பிடித்து தங்கம் வென்றார்கள். ஹாங்காங் அணி இந்தியாவை விட 1 புள்ளிகள் பின்தங்கி 24 சராசரி புள்ளிகளுடன் மூன்றாமிடம் பிடித்தது. படகோட்டுதலில் முதலிடம் பிடிப்பவர்களுக்கு ஒரு புள்ளியும் இரண்டாமிடம் பிடிப்பவர்களுக்கு இரண்டு புள்ளியும் என அதற்கேற்ப இடங்களுக்கு புள்ளிகள் வழங்கப்படும். இதில் குறைவான புள்ளிகள் பெறும் அணியே வெல்லும் என்பது கவனிக்கத்தக்கது.இந்த வெற்றியுடன் இந்திய அணிக்கு 62ஆவது பதக்கம் கிடைத்துள்ளது. அதில் 10 தங்கம், 22 வெள்ளி, 30 வெண்கலப் பதக்கங்கள் அடங்கும். தரவரிசையில் இந்தியா ஏழாவது இடத்தில் நீடிக்கிறது.SILVER FOR INDIA IN SAILING! Manu Francis and Prince Noble finish second in the men’s skiff opening series at #AichiNagoya2026. ⛵#AsianGames pic.twitter.com/RtpWFNLgOx— Olympic Khel ™ (@OlympicKhel) October 1, 2026இந்தியாவுக்கு 61ஆவது பதக்கம்..! வெண்கலம் வென்றது ஸ்குவாஷ் மகளிரணி! Asian Games 2026 sailing: Manu Francis, Prince Noble win silver in men’s skiff