குடியாத்தம் அருகே யானைத் தந்தம் கடத்தல்: 3 பேர் கைது!

Wait 5 sec.

வேலூர் அருகே இரண்டு யானைத் தந்தங்களைப் பறிமுதல் செய்து குடியாத்தம் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.வேலூர், குடியாத்தம் அருகே ஆந்திர மாநிலத்திலிருந்து சட்டவிரோதமாக யானைத் தந்தங்கள் கடத்தி வருவதாக வனத்துறையினருக்கு வந்த ரகசியத் தகவலின் அடிப்படையில் குடியாத்தம் வனத்துறையினர் குடியாத்தம்- வேலூர் சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரே இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேரைத் தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது அவர்களிடம் இரண்டு யானைத் தந்தங்கள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து இரண்டு யானைத் தந்தங்களைப் பறிமுதல் செய்த குடியாத்தம் வனத்துறையினர் யானைத் தந்தங்களைக் கடத்தி வந்த பள்ளத்தூர் பகுதியைச் சேர்ந்த திருவேங்கடம் (38) அணைக்கட்டு பகுதியைச் சேர்ந்த முனிசாமி( 52) கோவிந்தராஜ் (38) ஆகிய மூன்று பேரை கைது செய்து அவர்களிடமிருந்த இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து குடியாத்தம் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், ஆந்திரத்திலிருந்து யானைத் தந்தங்களை விலைக்கு வாங்கி வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது. இருசக்கர வாகனத்தில் யானைத் தந்தங்கள் கடத்தி வந்த சம்பவம் குடியாத்தம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அக்டோபர் மாத ராசி பலன்கள் - 2026! மேஷம் - மீனம்! அதிர்ஷ்டம் யாருக்கு?