அக்கா இணையத் தொடரின் வெளியீட்டுத் தேதி குறித்த தகவல் தெரியவந்துள்ளது.நடிகைகள் கீர்த்தி சுரேஷ் மற்றும் ராதிகா ஆப்தே ஆகியோர் புதிய இணையத் தொடரில் நடித்துள்ளனர். இந்தத் தொடருக்கு அக்கா எனப் பெயரிடப்பட்டுள்ளது.திரில்லர் பாணியில் எடுக்கப்பட்டுள்ள இந்த இணையத் தொடரை ஒய்ஆர்எஃப் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. அறிமுக இயக்குநர் தர்மராஜ் ஷெட்டி எழுதி இயக்கியுள்ளார்.இந்தத் தொடரில் தன்வி ஆஸ்மி மற்றும் அன்ஷுமான் புஷ்கர் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். அக்கா தொடர் நீண்ட காலமாகத் தயாரிப்பில் இருந்து வருகிறது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, நவம்பர் 2023-ல் இந்தத் தொடர் குறித்து அறிவிக்கப்பட்டது. இந்தத் தொடரின், முதல் போஸ்டர் கடந்த ஆண்டு பிப்ரவரியில் வெளியிடப்பட்டது.இந்தத் தொடர், 1980-களில் பெர்னூர் என்ற கற்பனையான ஊரில் நடக்கும் கதையாகவும், பெண் ஆதிக்க சமூகத்தை மையப்படுத்தியும் எடுக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில், அக்கா இணையத் தொடர் வரும் அக். 30 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகவுள்ளதாகத் தகவல் தெரியவந்துள்ளது.Information regarding the release date of the web series 'Akka' has been revealed.அங்கீகாரம் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!