ரூ. 7,000 கோடி இழப்பீடு? ஏஐ நிறுவனத்துக்கு எதிராக நடிகை வழக்கு!

Wait 5 sec.

தன்னுடைய புகைப்படங்களை அனுமதியின்றி வணிக நோக்கத்துக்காகப் பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டி, அமெரிக்க நிறுவனத்திடம் நடிகை ஊர்வசி ரௌதல்லா இழப்பீடு கோரியுள்ளார்.லெஜண்ட் சரவணன் நடித்த லெஜண்ட் படத்தில் கதைநாயகியாக நடித்திருந்த இந்தி நடிகை ஊர்வசி ரௌதல்லா, தன்னுடைய புகைப்படங்களை அனுமதியின்றி பயன்படுத்தியதாக அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸை சேர்ந்த செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தின் மீது குற்றம் சாட்டியுள்ளார்.இதுகுறித்து, நடிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "ஊர்வசியின் அனுமதியின்றி, அவரின் புகைப்படங்களைப் பயன்படுத்தி, லாஸ் ஏஞ்சலீஸ் நிறுவனம் கோடிக்கணக்கில் வர்த்தகம் செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் அமெரிக்க நிறுவனத்துக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், அந்த நிறுவனத்துக்கு எதிராக தற்போது ரூ. 7,000 கோடி இழப்பீடு கோருவது குறித்து முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் கடுமையான சட்ட நடவடிக்கைகள் மூலம் இழப்பீடு பெறப்படும்.ஒரு தனிநபரின் அனுமதியின்றி அவரின் அடையாளம், புகைப்படங்கள், விடியோக்களை வணிக நோக்கில் பயன்படுத்துவது சட்டப்படி தவறானது. எங்கள் அனுமதியின்றி, ஊர்வசியின் அடையாளத்தைப் பயன்படுத்தக் கூடாது" என்று கூறியுள்ளனர்.ஆண்டுதோறும் சினிமா, சின்ன திரை விருதுகள்: ராஜ்மோகன் உறுதி Actress Urvashi Rautela's team seeks ₹7,000 crore in damages for unauthorised use of her name