வாட்ஸ் அப்பில் நேரடியாக முகநூல், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களை அனுப்பும் வகையிலான புதிய அம்சத்தை வாட்ஸ்அப் விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது. இதன்மூலம் முகநூல், இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள், விடியோ, ரீல்ஸ்களை அனுப்ப அவற்றை டவுன்லோடு செய்ய வேண்டியதில்லை. அவற்றின் லிங்குகளை அனுப்ப வேண்டிய தேவையும் இல்லை என்கிறது வாட்ஸ்அப்.வாட்ஸ் அப்பில் இன்ஸ்டாகிராம் அல்லது முகநூல் தரவுகளைப் பகிர வேண்டுமென்றால், அவற்றை பதிவிறக்கம் (டவுன்லோட்) செய்ய வேண்டும் அல்லது அவற்றின் லிங்குகளை அனுப்ப வேண்டும். பதிவிறக்கம் செய்த விடியோவை வாட்ஸ் அப்பில் அனுப்ப தனியாக டேட்டா தேவைப்படும். லிங்குகளை அனுப்பிலா, அவற்றை கிளிக் செய்து பார்ப்பவர்களிடமும் முகநூல் அல்லது இன்ஸ்டாகிராம் கணக்கு இருக்க வேண்டும். ஆனால், தற்போது வாட்ஸ் அப் புதிய அம்சத்தை பரிசோதனை செய்து வருகிறது. இதன்மூலம் வாட்ஸ்அப்பில் நேரடியாக முகநூல், இன்ஸ்டாகிராம் தரவுகளை அனுப்ப முடியும். வாட்ஸ் அப்பில் இருந்தவாறே அவற்றைப் பார்க்க முடியும். இதற்காக அக்கவுண்ட்ஸ் சென்டர் என்ற அம்சம் புதிதாக வாட்ஸ்அப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. இதனை இணைத்து வைத்துக்கொள்வதன் மூலம் வாட்ஸ்அப்பில் விடியோ அல்லது புகைப்படம் தேர்வு செய்யும் பகுதியில் இன்ஸ்டாகிராம், முகநூலில் ஏற்கெனவே பதிவிட்ட புகைப்படங்கள், விடியோக்கள், ரீல்ஸ்களை பார்க்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது சோதனை அடிப்படையில் சில பயனர்களுக்கு மட்டும் இந்த அம்சம் கொடுக்கப்பட்டுள்ளது. விரைவில் பல பயனர்களுக்கு வழங்கப்படும் என வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது.சோனி கேமராவுடன் வெளியாகும் எச்.எம்.டி. வைப் 2 ப்ரோ ஸ்மார்ட்போன்!You can send Insta Reels directly on WhatsApp! New feature coming soon