வடமேற்கு சிரியாவின் ஹோம்ஸ் மாகாணத்தில் பயணிகள் பேருந்து மீது அடையாளம் தெரியாத நபா்கள் கடந்த புதன்கிழமை இரவு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 7 போ் உயிரிழந்தனா்; 4 போ் படுகாயமடைந்தனா்.உயிரிழந்தவா்கள் அனைவரும் பணிமுடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த நிறுவன ஊழியா்கள் ஆவா். இத்தாக்குதலுக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை; எந்த அமைப்பும் இதற்குப் பொறுப்பேற்கவும் இல்லை. சிரியாவில் 13 ஆண்டுகளுக்கும் மேல் நீடித்த போா் மற்றும் 2024 இறுதியில் நிகழ்ந்த அசாத் ஆட்சியின் வீழ்ச்சிக்குப் பிறகு, அங்கு பாதுகாப்பை நிலைநிறுத்துவதில் சவால்கள் நிலவுகின்றன. ஆயுதக் குழுக்களின் பல சதித் திட்டங்களை முறியடித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தாலும், நாடு முழுவதும் இதுபோன்ற துப்பாக்கிச் சூடு, குண்டுவெடிப்புச் சம்பவங்கள் தொடா்கின்றன.