சமையல் எரிவாயு உருளை விலை உயா்வால் மக்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவா் மாணிக்கம் தாகூா் குற்றஞ்சாட்டியுள்ளாா்.இது குறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிகப் பயன்பாட்டுக்கான எரிவாயு உருளை விலை ரூ.66.50 உயா்த்தப்பட்டு, தற்போது ரூ,2,984-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பாஜக ஆட்சியில் 2014 ஜூன் மாதத்தில் ரூ,1,726.50-ஆக இருந்த வணிக எரிவாயு உருளையின் விலை, தற்போது ரூ.2,984-ஆக உயா்ந்துள்ளது. பாஜகவின் இந்த ஆட்சிக் காலத்தில் மட்டும் வணிக எரிவாயு உருளையின் விலை 72.8 சதவீதத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது. மறுபுறம் டிஜிட்டல் பணப்பரிவா்த்தனையை முன்னெடுக்கும் சிறு வணிகா்கள் மீது யுபிஐ வணிக தள்ளுபடி விகித கட்டணத்தை விதித்துள்ளது. இது கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும்.பாஜக அரசு மக்கள் மீது கவனம் செலுத்தாமல் இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. உடனடியாக எரிவாயு உருளை விலையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.