தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாருக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவிக்க திமுக முடிவு செய்துள்ளது.தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாருக்கு எதிராக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கண்டன தீா்மானம் கொண்டுவர காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த மசோதாவுக்கு நாடாளுமன்றத்தில் ஆதரவு தெரிவிக்க முடிவெடுத்துள்ளதாக திமுக தெரிவித்துள்ளது.இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்காத நிலையிலும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராகக் கொண்டு வரப்படவுள்ள இந்தத் தீர்மானத்தை ஆதரிக்க திமுக தலைமை முடிவெடுத்துள்ளது.இதுதொடர்பாக, செய்தியாளர்களிடம் பேசிய திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன், பாஜகவை எதிர்க்கட்சிகள் எதிர்க்கும் எந்தவொரு விவகாரத்திலும், திமுக துணையாக நிற்கும் என்று கூறினார்.அவர் பேசுகையில், ”நாங்கள் இந்தியா கூட்டணியில் இல்லை. அது வேறு விஷயம். ஆனால், சித்தாந்த ரீதியாக நாங்கள் ஒன்றுபட்டு நிற்கிறோம். நாடாளுமன்றத்தில் ஞானேஷ் குமாருக்கு எதிராகத் தீர்மானம் கொண்டு வருபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை நாங்கள் ஆதரிப்போம். ஏனெனில், இதுதொடர்பாக எங்கள் தலைவர் முன்னரே அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். ” என்று தெரிவித்தார்.திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவியிலிருந்து விலக வேண்டும் என்றும், அவர் தொடர்ந்து அப்பதவியில் நீடிக்க எந்த உரிமையும் இல்லை என்றும் சில நாள்களுக்கு முன் அறிக்கை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.2 நாள்களில் 9 கொலைகள்! இனியும் மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருக்காமல்... உதயநிதி விமர்சனம்Bill against Gyanesh Kumar: DMK extends support!