ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை உலகக் கோப்பைத் தொடருக்கு தயாராவதற்கான அடித்தளம் என தென்னாப்பிரிக்க வீரர் கேசவ் மகாராஜ் தெரிவித்துள்ளார்.ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்தாண்டு தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் நடைபெறவுள்ளது. உலகக் கோப்பையை நடத்தும் நாடுகளில் ஒன்றான தென்னாப்பிரிக்கா தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.இந்த நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை உலகக் கோப்பைத் தொடருக்கு தயாராவதற்கான அடித்தளம் என தென்னாப்பிரிக்க வீரர் கேசவ் மகாராஜ் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை தென்னாப்பிரிக்க அணி முழுமையாகக் கைப்பற்ற முயற்சிக்க வேண்டும். அடுத்தாண்டு ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கு நடைபெறவுள்ளது. அதற்கு தயாராவதற்கு தென்னாப்பிரிக்க அணிக்கு சிறப்பான வாய்ப்பாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர் அமைந்துள்ளது.ஆஸ்திரேலிய அணி உலக சாம்பியன். அவர்களுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டு தொடரை முழுமையாக வெல்வது நம்முடைய நம்பிக்கையை அதிகரிக்க உதவும். உலகக் கோப்பைத் தொடருக்கு இன்னும் 12 மாதங்கள் மட்டுமே உள்ளன. அதற்கான அடித்தளத்தை அமைக்க நமக்கு சிறப்பான வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்றார்.3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை தென்னாப்பிரிக்க அணி 2-0 என்ற கணக்கில் ஏற்கனவே கைப்பற்றிவிட்ட நிலையில், மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை (செப்டம்பர் 30) நடைபெறுகிறது.South African player Keshav Maharaj has described the ODI series against Australia as a foundation for preparing for the World Cup.சிஎஸ்கேவின் பந்துவீச்சு பயிற்சியாளராகும் மோஹித் சர்மா?