88ஆவது நிமிஷத்தில் மைக்கேல் ஒலிஸேவின் அற்புதமான கோல்..! பெல்ஜியத்தை வீழ்த்தியது பிரான்ஸ்!

Wait 5 sec.

நேஷன்ஸ் லீக் போட்டியில் பிரான்ஸ் அணி 1-0 என பெல்ஜியத்தை வீழ்த்தியது. இத்துடன் பிரான்ஸ் அணி இந்த லீக்கில் இரண்டு போட்டிகளில் இரண்டு வெற்றிகளைப் பெற்றுள்ளது. கால்பந்து உலகக் கோப்பையில் சாம்பியனாகும் என்ற எதிர்பார்த்த பிரான்ஸ் அணி நான்காம் இடம் பிடித்து அதிர்ச்சி அளித்தது. இதனால், பயிற்சியாளர் நீக்கப்பட்டார். தற்போது, பிரான்ஸ் அணிக்கு ஜாம்பவான் வீரரான ஜிடானே ஜிடான் நியமிக்கப்பட்டுள்ளார். இவரது தலைமையில் இதுவரை 2 போட்டிகளிலுமே வென்று அசத்தியுள்ளது. இன்று நடைபெற்ற நேஷன்ஸ் லீக் ஆட்டத்தில் முதல் பாதியில் பெல்ஜியம் - பிரான்ஸ் கோல் அடிக்காமல் 0-0 என்றிருந்தது. இரண்டாம் பாதியிலும் இரு அணிகளுமே கோல் அடிக்காமல் இருந்தன. பின்னர், 76 ஆவது நிமிஷத்தில் மைக்கேல் ஒலிஸே களமிறங்கினார். அடுத்த சில நிமிஷங்களில் அதாவது 88ஆவது நிமிஷத்தில் ரயான் செர்கி அசிஸ்ட்டில் ஒலிஸே கோல் அடித்து அசத்தினார். இந்த கோல் அடித்த விதம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக, மகிழ்ச்சியில் பிரான்ஸ் அணியின் பயிற்சியாளரின் ரியாக்‌ஷனும் இணையத்தில் வைரலாகி வருகிறது.தனியாளாக மைக்கேல் ஒலிஸே எதிரணியினரைக் கடந்து, பந்தை எடுத்து சென்றது ரசிகர்கள் மத்தியில் பாராட்டைப் பெற்று வருகிறது. இதன்மூலம் பிரான்ஸ் அணி 1-0 என வென்று புள்ளிப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.குரூப் ஏ1 1. பிரான்ஸ் - 6 புள்ளிகள் (2 போட்டிகள்) 2. பெல்ஜியம் - 3 புள்ளிகள் (2 போட்டிகள்)3. இத்தாலி - 3 புள்ளிகள் (2 போட்டிகள்)4. துருக்கி - 0 புள்ளி ( 2போட்டிகள்)I'm still not over this Michael Olise goal. https://t.co/yQbbbl1AR8— 10 (@Kylian) September 28, 2026முதல்வர் விஜய்யிடம் இருந்து ஓர் அழைப்பு... வெள்ளி வென்ற ஆன்சி சோஜன் நெகிழ்ச்சி! Nations League: Michael Olise's Late Strike Leads France Past Belgium