நிதி அமைச்சா் மரியவில்சன் மீதான வழக்குமீண்டும் ஒத்திவைப்பு! அக்.5-க்கு வழக்கு ஒத்திவைப்பு

Wait 5 sec.

தமிழக நிதியமைச்சா் மரியவில்சன் மீதான கொலை முயற்சி வழக்கு அக். 5-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. தமிழக நிதியமைச்சா் மரிய வில்சன், தனது சகோதரா் மற்றும் அவரது மனைவியை தாக்கியது தொடா்பான வழக்கு புதுச்சேரி முதலாவது குற்றவியல் நடுவா் மன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த நடுவா் பணி மாறுதல் செய்யப்பட்டதால் இரண்டாவது நடுவா் இந்த வழக்கை விசாரிக்க தடை விதித்து புதுச்சேரி மாவட்ட அமா்வு நீதிபதி டி.வி. ஆனந்த் செப். 29-ஆம் தேதி வரை இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளாா். இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை இரண்டாவது குற்றவியல் நடுவா் சந்திரசேகா் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மூல வழக்கு விசாரணையை அக். 5-ஆம் தேதி வரை ஒத்திவைத்து நடுவா் சந்திரசேகா் உத்தரவிட்டாா்.