பிக் பாஸ் வீட்டில் இருந்து நடிகர் குமரன் தங்கராஜ் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியேறியுள்ளார். தனது அப்பாவுக்கு நியாபக மறதி இருப்பதால், தான் உள்ளே இருக்கும் காலகட்டத்தில் ஏதேனும் நேர்ந்துவிடுமோ என்ற அச்சம் அதிகரித்துக்கொண்டே இருப்பதாகவும், அப்படி ஏதாவது நடந்தால் வாழ்நாள் முழுக்க அந்த குற்ற உணர்ச்சியை என்னால் தாங்க முடியாது என்பதால் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார். பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி 4வது வாரத்தை எட்டியுள்ளது. 24 நாள்கள் கடந்த நிலையில், இந்த வாரத்தில் புதிதாக 3 போட்டியாளர்கள் வைல்டு கார்டு மூலம் உள்ளே நுழையவுள்ளனர். இதனிடையே லீடர்ஸ் எக்ஸிட்போல் மூலம் வெளியேற்றப்பட்ட சவின்யா, ஜாவேத், லட்சுமி பிரியா ஆகியோர் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் கயிற்றுடன் நுழைந்தனர். அவர்கள் மூவரும் பிக் பாஸ் வீட்டில் நீடிக்கத் தகுதியற்ற மூவரைத் தேர்வு செய்து அவர்களை கயிற்றின் மறுமுனையில் கட்ட வேண்டும். இந்த வாரத்தை 6 பேரும் கைகளில் கயிறு கட்டிக்கொண்டே கடக்க வேண்டியுள்ள நிலையில், இடையிடையே அவர்களுக்கிடையே போட்டிகளும் வைக்கப்படுகின்றன. போட்டிகளின் முடிவில் யாரேனும் மூன்று போட்டியாளர் வெளியேற்றப்படுவர். இதனால் நிகழ்ச்சியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் விறுவிறுப்பைக் கூட்டும் வகையில் போட்டியாளர்களுக்கு ரூ. 5 லட்சத்துடன் பணப்பெட்டியும் வைக்கப்பட்டுள்ளது.மன உறுதியின்மையால் நிகழ்ச்சியில் தொடர்ந்து நீடிக்க விருப்பம் இல்லாத நபர்கள் கைகளைத் தூக்கி பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறலாம். இந்நிலையில் எதிர்பாராத விதமாக நிகழ்ச்சியில் இருந்து பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு குமரன் வெளியேறுவதாக அறிவித்துள்ளார். இது மற்ற போட்டியாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பணத்தை எடுத்துக்கொண்டு வெளியேறும் குமரன்மற்ற போட்டியாளர்கள் குமரனை தடுத்த நிலையில், தனது முடிவில் தான் உறுதியாக இருப்பதாக குமரன் கூறினார். ஒருகட்டத்திற்கு மேல் கண் கலங்கிய குமரன், தனது அப்பாவுக்கு அடிக்கடி நியாபக மறதி ஏற்படுவதாகவும், தான் உள்ளே இருக்கும் காலகட்டத்தில் அவருக்கு ஏதேனும் நேர்ந்துவிட்டால், அந்த குற்ற உணர்ச்சியை வாழ்நாள் முழுக்கத் தாங்க முடியாது என கதறி அழுதார். அவர் பேசியதாவது: ''என் அப்பா ஒரு நோயாளி. அவருக்கு மறதி உள்ளது. இப்போது எனக்கு பயமாக உள்ளது. இப்போது அப்பா கூட இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. நான் உள்ளே இருக்கும்போது அவருக்கு வெளியே ஏதாவது நேர்ந்துவிட்டால் அந்த குற்ற உணர்ச்சியை வாழ்நாள் முழுக்க என்னால் தாங்க முடியாது'' என அழுதுகொண்டே கூறி, பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற தனது முடிவில் உறுதியாக இருப்பதாகக் கூறினார். 7 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சீரியலில் நடிக்கும் சின்ன திரை நடிகை!Bigg boss 10 tamil live update Kumaran left the Bigg Boss house for his father