ஒருநாள் போட்டிகளில் ரோஹித் சர்மா புதிய சாதனை!

Wait 5 sec.

ஒருநாள் போட்டிகளில் 12000 ரன்களைக் கடந்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா சாதனை படைத்துள்ளார்.இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி குவாஹாட்டியில் நேற்று (செப்டம்பர் 30) நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.இந்தப் போட்டியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா சதம் விளாசி அசத்தினார். அவர் 75 பந்துகளில் 101 ரன்கள் எடுத்தார். அதில் 10 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் அடங்கும்.1️⃣2️⃣,0️⃣0️⃣0️⃣ and he keeps going strong #TeamIndia great Rohit Sharma becomes the 3️⃣rd Indian to get to this Updates ▶️ https://t.co/6XCYRtZLAi#INDvWI | @mflone_ | @ImRo45 pic.twitter.com/Ov3O2Y34Jz— BCCI (@BCCI) September 30, 2026நேற்றையப் போட்டியில் 101 ரன்கள் எடுத்ததன் மூலம், ஒருநாள் போட்டிகளில் 12000 ரன்களைக் கடந்து ரோஹித் சர்மா புதிய சாதனை படைத்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் 12000 ரன்களைக் கடந்த மூன்றாவது இந்திய வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் 12000 ரன்களுக்கும் அதிகமாக குவித்து சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலி இருவரும் முதல் இரண்டு இடங்களில் உள்ளனர்.இதுவரை இந்திய அணிக்காக 290 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள ரோஹித் சர்மா 12028 ரன்கள் எடுத்துள்ளார். அதில் 35 சதங்கள் மற்றும் மூன்று இரட்டைச் சதங்கள் அடங்கும்.Former Indian captain Rohit Sharma has achieved the milestone of crossing 12,000 runs in One Day Internationals.இதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை; தோல்விக்குப் பிறகு மே.இ.தீவுகள் பயிற்சியாளர் பேச்சு!