மே.இ.தீவுகள் தொடர்: சிஎஸ்கே வீரர் அன்ஷுல் காம்போஜ் இந்திய ஒருநாள் அணியில் சேர்ப்பு!

Wait 5 sec.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 3-ஆவது ஒருநாள் போட்டியிலிருந்து காயம் காரணமாக விலகிய பிரசித் கிருஷ்ணாவுக்குப் பதிலாக அன்ஷுல் காம்போஜ் சேர்க்கப்பட்டுள்ளார்.இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணி மூன்று ஒருநாள் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் மோதும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி வருகிற சனிக்கிழமை (அக். 3) பஞ்சாப் மாநிலம் முல்லான்பூரில் நடைபெறவிருக்கிறது.இந்திய வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா காயம் காரணமாக மூன்றாவது ஒருநாள் போட்டியிலிருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி இந்திய வேகப்பந்து வீச்சாளர் அன்ஷூல் காம்போஜுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.புதுச்சேரியில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்காக அன்ஷூல் விளையாடி வருகிறார். அவரை உடனடியாக இந்திய அணியில் இணைய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான போட்டியில் 8 மெய்டன்கள் உள்பட 17.3 ஓவர்கள் பந்து வீசிய அன்ஷூல் காம்போஜ் 34 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.அன்ஷூலுக்குப் பதிலாக பிரஃபுல் ஹின்கே இந்தியா ஏ அணியுடன் இணைந்துள்ளார். மிதவேகப் பந்து வீச்சாளரான அன்ஷூல் காம்போஜ், இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டர் டெஸ்ட் தொடரில் அறிமுகமாகியிருந்தார். சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இதுவரை அறிமுகமாகாத காம்போஜ், 35 லிஸ்ட் ஏ போட்டிகளில் 56 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.Prasidh Krishna is going to miss the third and final India vs West Indies ODI in New Chandigarh because of a hamstring injury that he picked up during the run fest in the second ODI in Guwahati. Anshul Kamboj has been named his replacement.