4 -வது நாளாக பங்குச்சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது; ஆட்டோ பங்குகள் 3% சரிவு

Wait 5 sec.

இந்திய பங்குச்சந்தைகள் இந்த வாரத்தில் தொடந்து 4 ஆவது நாளாக இன்றும் (அக். 1) வீழ்ச்சியைச் சந்தித்தன.மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 72,192.89 என்ற புள்ளிகளில் தொடங்கியது. காலையில் சென்செக்ஸ் சற்று நிலையாக வர்த்தகமான நிலையில் பிற்பகலில் சரிந்தது. வர்த்தக நேர முடிவில், சென்செக்ஸ் 570.59 (0.79%) புள்ளிகள் சரிந்து 71,909.70 புள்ளிகளில் நிலை பெற்றது.அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 198.50 (0.88%) புள்ளிகள் சரிந்து 22,421.95 புள்ளிகளில் வர்த்தகம் முடிந்தது. நிஃப்டி50 குறியீட்டில் பஜாஜ் ஆட்டோ, மாருதி சுசுகி இந்தியா, ஸ்ரீராம் ஃபைனான்ஸ் ஆகியவை அதிக சரிவைச் சந்தித்த நிறுவனங்களாகும். நிஃப்டி மிட்கேப் 100, நிஃப்டி ஸ்மால்கேப் 100 முறையே 1.01 சதவீதம், 0.97 சதவீதம் சரிந்து முடிந்தன.துறைவாரியாக, நிஃப்டி ஆட்டோ அதிகபட்சமாக 3% வரை வீழ்ச்சியைச் சந்தித்தது. நிஃப்டி மீடியா, மெட்டல், எஃப்எம்சிஜி பங்குகளும் சரிந்தன. அதே நேரத்தில் நிஃப்டி ஐடி பங்குகள் லாபமடைந்தன. நிஃப்டி தனியார் வங்கிப் பங்குகளும் சற்று (0.01%) உயர்வுடன் முடிந்தன. சென்செக்ஸ் 30 பங்குகளில் இன்போசிஸ், டிசிஎஸ், ஹெச்சிஎல் டெக், ஹெச்டிஎப்சி வங்கி, கோட்டக் வங்கி, டெக் மஹிந்திரா ஆகிய 6 நிறுவனங்கள் மட்டும் லாபத்துடன் முடிந்தன. அமெரிக்க பத்திர வட்டி விகிதம் உயர்வு, கச்சா எண்ணெய் விலை உயர்வு (97.7 டாலர்), வெளிநாட்டுப் பங்குகள் அதிகம் விற்பனை, ஆட்டோ பங்குகள் அதிகம் விற்பனை, இந்திய ரூபாய் மதிப்பு (95.98 டாலர்) வீழ்ச்சி ஆகியவை இந்திய பங்குச்சந்தையின் சரிவுக்கு காரணமாக கூறப்படுகின்றன. Stock Market Close: Sensex falls for 4th day, ends 571pts down; Nifty at 22,422; Nifty Auto slips 3%