தாராபுரத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நாளை பிரசாரம்!

Wait 5 sec.

தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து, அந்தக் கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் நாளை(அக். 2) பிரசாரம் மேற்கொள்கிறார்.திருப்பூர் மாவட்டம், தாராபுரம் சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் அக்டோபா் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில், திமுக சார்பில் சுகன்யா போட்டியிடும் நிலையில் அவரை ஆதரித்து முன்னாள் அமைச்சர்கள், சட்டப் பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோா் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் பொறுப்பாளராக முன்னாள் அமைச்சர் கே.என். நேரு நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் அமைச்சர்கள் மு.பெ. சாமிநாதன், என். கயல்விழி செல்வராஜ், அ.ரா. சக்கரபாணி உள்ளிட்டோரும் தாராபுரத்தில் முகாமிட்டு தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த நிலையில், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து, மு.க. ஸ்டாலின் நாளை(அக். 2) பிரசாரம் மேற்கொள்கிறார்.திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அமராவதி சிலையில் இருந்து பொள்ளாச்சி சாலை பெரிய கடை வீதி வழியாக சாலைவலம் சென்று வாக்கு சேகரிக்கிறார்.இதனைத் தொடர்ந்து, மாருதி நகர் அருகே நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்று வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.DMK leader M.K. Stalin will campaign tomorrow (Oct. 2) in support of the party's candidate, Suganya, who is contesting the by-election in the Dharapuram constituency.மதுராந்தகத்தில் அக்.3இல் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பிரசாரம்