இந்திய பங்குச்சந்தை தொடர்ந்து இரண்டாவது நாளாக சரிவுடன் தொடங்கி வர்த்தகமாகி வருகிறது.மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 72,579.08 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 10.25 மணியளவில் சென்செக்ஸ் 647.25 புள்ளிகள் (0.89%) சரிந்து 72,124.47 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 188.40 புள்ளிகள் (0.83%) சரிந்து 22,592 .25 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.சென்செக்ஸில் சன்பார்மா, இண்டிகோ, அதானி போர்ட்ஸ், பாரதி ஏர்டெல் ஆகிய நிறுவனங்களின் பங்குகளைத் தவிர, மற்ற 26 நிறுவனங்களின் பங்குகளும் சரிசைக் கண்டுள்ளன.ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது மற்றும் போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பான ஈரானின் முன்மொழிவுகளை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை நிராகரித்தார்.மேலும், கச்சா எண்ணெய் விலை 100 டாலரைத் தாண்டியுள்ளது, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தொடர்ந்து பங்குகளை விற்பது, வங்கி பங்குகள் கடுமையாக சரிவு, உலக பொருளாதாரக் காரணிகள் உள்ளிட்டவை பங்குச்சந்தையில் இன்று தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.Indian stock market falls for the second consecutive day!தொடர்ந்து குறையும் தங்கம் விலை! இன்றைய நிலவரம்! (செப். 29)