நடிகர் மணிகண்டன் நடிப்பில் உருவான மக்கள் காவலன் திரைப்படத்தின் அப்டேட் போஸ்டர் வெளியாகியுள்ளது.குட் நைட் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான மணிகண்டன் லவ்வர், குடும்பஸ்தன் என ஹாட்ரிக் வெற்றியைக் கொடுத்து அசத்தினார்.தற்போது, அறிமுக இயக்குநர் சந்தோஷ் குமார் இயக்கத்தில் ’மக்கள் காவலன்' என்ற படத்தில் காவலதிகாரியாக நடித்துள்ளார். இந்தப் படத்துக்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கிறார். நீலம் புரடக்ஷன்ஸ் மற்றும் பிர்லா ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவான இந்தப் படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில், இன்று நடிகர் மணிகண்டனின் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இதில், இன்று மாலை 6 மணிக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஹிப்ஹாப் ஆதியின் மீசைய முறுக்கு - 2 வசூல் இவ்வளவா?An update poster for the film Makkal Kavalan, starring actor Manikandan, has been released.