சென்னை விருகம்பாக்கத்தில், திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றி ரூ. 40 லட்சம் மோசடி செய்ததாக சின்ன திரை நடிகர் சரவணன் நாயர் கைது செய்யப்பட்டுள்ளார்.விருகம்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வருபவர் சரவணன் நாயர். இவர், தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் சினிமாவில் துணை நடிகராக நடித்து வருகிறார். இவருக்கு பெண் வழக்குரைஞர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது, பின்னர் காதலாக மாறி, இருவரும் ஒரே வீட்டில் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர். அந்தப் பெண் வழக்குரைஞர் கணவரைப் பிரிந்து வாழ்ந்து வருகிறார்.சரவணனுக்கும் ஏற்கெனவே ஒரு பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவு இருப்பதும், அவர்களுக்கு 2 குழந்தைகள் இருப்பதும் தெரிந்திருந்த நிலையிலும், அந்தப் பெண் தொடர்ந்து சரவணனுடன் பழகி வந்துள்ளார்.இதனிடையே, இருவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு அந்தப் பெண்ணை திருமணம் செய்ய மறுத்துள்ளார். மேலும், கொலை மிரட்டல் விடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.இந்த நிலையில், சரவணன் அந்தப் பெண்ணை திருமணம் செய்வதாகக் கூறி ரூ. 40 லட்சம் மோசடி செய்ததாக பெண் வழக்குரைஞர், சரவணன் மீது புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரை விசாரித்த காவல் துறை, நடிகர் சரவணனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.Television actor Saravanan Nair has been arrested in Virugambakkam, Chennai, for allegedly swindling rs. 40 lakh by deceiving a woman with a promise of marriage.ரூ. 46 கோடி பண மோசடி: நடிகை அம்பிகா மீது சகோதரி ராதா புகார்!