இந்திய வீரர் தீபக் சாஹரின் ரூ. 1.5 லட்சம் கிரிக்கெட் பேட்டுகள் திருட்டு!

Wait 5 sec.

இந்திய கிரிக்கெட் வீரர் தீபக் சாஹரின் கிரிக்கெட் மட்டைகள் திருடப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்திய அணியின் வீரரும், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருபவரும் தீபக் சாஹர், உத்தரப் பிரதேசத்தின் ஆக்ராவில் சாஸ்திரிபுரம் திடலில் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவருடைய பிளேயர் எடிசன் ரூ. 1.5 லட்சம் மதிப்பிலான மூன்று மட்டைகளை யாரோ அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றதாகக் கூறப்படுகிறது.இந்த நிலையில், இதுதொடர்பாக தீபக் சாஹர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். View this post on Instagram அந்த விடியோ பதிவில், “நேற்று மாலை இங்கிருந்து 3 பேட்டுகள் திருடப்பட்டுவிட்டன. நான் என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்? அவை மிகவும் நல்ல பேட்டுகள். அவற்றைத் திருடியவருக்கு அவை எவ்வளவு விலை உயர்ந்தவை என்பதுகூடத் தெரியாது. கிரிக்கெட் மட்டைகளைத் திருடியவர்களுக்கு அதன் உண்மையான மதிப்பு தெரியாது. அவர் அதை யாரிடமாவது விற்றுவிடுவார் அல்லது டென்னிஸ் பந்தில் விளையாடி வீணடித்துவிடுவார். இதற்கு நான் என்ன செய்ய வேண்டும்? போலீசில் புகார் அளிக்கவா, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஜி அல்லது பிரதமர் மோடிஜியிடம் செல்லவா? அல்லது திருடனுக்கு நல்ல புத்தி கொடுக்க சொல்லி நேரடியாகக் கடவுளிடமே வேண்டிக்கொள்ளவா?” என்றார் தீபக் சாஹர்.Indian cricketer Deepak Chahar has recently shared a video after three of his bats were allegedly stolen from a practice ground. The three bats, which Chahar described as expensive player-edition bats, were worth around Rs 1.5 lakh in total, according to him