விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மாற்றுத்திறனாளிகள் போராட்டம்!

Wait 5 sec.

மக்கள் தொகை கணக்கெடுப்புத் திட்டப் பணியில் மாற்றுத் திறனாளிகள் புறக்கணிக்கப்படுவதாகக் கூறி விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.21 வகையான மாற்றுத் திறனாளிகளை மக்கள்தொகை கணக்கெடுப்பில் பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் இந்தப் போராட்டத்தை நடத்தினர்.முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள்.இந்தப் போராட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஜி. ஜெயக்குமார் தலைமை வகித்தார். மாவட்டப் பொருளாளர் எம். யுகந்தி முன்னிலை வகித்தனர். மாநிலத் துணைத் தலைவர் வி. ராதாகிருஷ்ணன், மாவட்டச் செயலர் ஏ. கிருஷ்ணமுர்த்தி உள்ளிட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகப் பெருந்திட்ட வளாகத்திலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு ஆட்சியரகம் வந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டு முழக்கங்களை எழுப்பினர்.அதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் வந்து மனுக்களை வாங்க வேண்டும் என்று கூறி அவர்கள் முழக்கங்களையும் எழுப்பினர்.People with disabilities staged a protest by laying siege to the Villupuram District Collector's office.