அனுமன் தொடர் ஒளிபரப்பில் மீண்டும் மாற்றம்!

Wait 5 sec.

பக்தித் தொடரான அனுமன் சீரியல் ஒளிபரப்பில் மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.சன் தொலைக்காட்சியில் இதிகாசத்தை மையப்படுத்தி ஒளிபரப்பாகி வரும் அனுமன் தொடர், பல தொடர்களைப் பின்னுக்குத் தள்ளி, டிஆர்பியில் முன்னிலையில் உள்ளது.முன்னதாக ஒளிபரப்பாகி வந்த இராமாயணம் தொடர் டிஆர்பியில் முன்னிலையில் இருந்த நிலையில், அதற்கு மாற்றாக தொடங்கப்பட்ட அனுமன் தொடரும் டிஆர்பியில் முன்னிலையில் இருந்து வருகிறது.இதிகாசத்தை மையப்படுத்தி ஒளிபரப்பாகிவரும் அனுமன் தொடருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்தத் தொடர் எப்போது ஒளிபரப்பு செய்யப்பட்டாலும், பார்ப்பதற்கென்று தனி ரசிகர்கள் இருக்கிறார்கள்.கடந்தாண்டு செப். 29 ஆம் தேதி தொடங்கப்பட்ட அனுமன் தொடர் வார நாள்களில் நாள்தோறும் ஒளிபரப்பப்பட்டது. பின்னர், வார இறுதி நாளான ஞாயிறுதோறும் காலை 9 முதல் 10 மணி வரை ஒளிபரப்பு செய்யப்பட்டு வந்தது.இந்த நிலையில், அனுமன் தொடர் ஒளிபரப்பில் மீண்டும் மாற்றம் செய்யப்பட்டு, ஞாயிறுதோறும் காலை 9 முதல் 9.30 மணி வரை 30 நிமிடங்கள் மட்டும் ஒளிபரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.ஒரு நாள் மட்டும் ஒளிபரப்பு செய்யப்படும் அனுமன் தொடரை, நாள்தோறும் ஒளிபரப்ப வேண்டும் என்று ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.There has been another change in the broadcast schedule of the devotional serial 'Hanuman'.கார்த்திகை தீபம் தொடரின் ஒளிபரப்பில் மாற்றம்!