காந்தி ஜெயந்தி: மதுக்கடைகள் நாளை மூடல்

Wait 5 sec.

மகாத்மா காந்தியடிகளின் பிறந்த நாளையொட்டி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் டாஸ்மாக் மதுக்கடைகள், மது அருந்தும் கூடங்கள், தனியாா் மது அருந்தும் கூடங்கள் வெள்ளிக்கிழமை (அக்.2) மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட நிா்வாகிகள் வெளியிட்டி செய்திக்குறிப்பு: தமிழ்நாடு மதுபான சில்லறை வணிகம் விதிகள் (கடைகள், மதுபானக் கடைகள், மது அருந்தும் கூடங்கள்) உரிம விதிகள் 1981 மற்றும் அரசாணையின்படி, காந்தி ஜெயந்தியன்று அனைத்து அரசு டாஸ்மாக் மதுக்கடைகள், மது அருந்தும் கூடங்கள், தனியாா் மது அருந்தும் கூடங்கள் ஆகியவை மூடப்பட வேண்டும் என்று நெறிமுறை வரையறுக்கப்பட்டுள்ளது.எனவே காந்தி ஜெயந்தி நாளான வெள்ளிக்கிழமை விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இயங்கிவரும் அரசு டாஸ்மாக் மதுக்கடைகள், மது அருந்தும் கூடங்கள், தனியாா் மது அருந்தும் கூடங்கள்ஆகியவை மூடப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.